திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 15 மே 2017 (14:40 IST)

ரஜினி சாதனையை முறியடித்த அஜித் ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் வெளிவர உள்ள விவேகம் படத்தின் டீசர் 68 மணி நேரத்தில் 1 கோடி வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.


 

 
சிவா இயக்கத்தில் வெளிவர உள்ள விவேகம் படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. டீசர் வெளியான 12 மணி நேரத்துக்குள் 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இதன் மூலம் இந்த டீசர் புதிய சாதனை படைத்தது.
 
இதற்கு முன் ரஜினியின் கபாலி படத்தின் டீசர் 24 மணி நேரத்தில் 50 லட்சம் வியூஸ் கிடைத்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விவேகம் படத்தின் டீசர் 68 மணி 1 கோடி வியூஸ் பெற்றுள்ளது. ரஜினியின் கபாலி டீசர் 1 கோடி வியூஸ் பெற 72  மணி நேரம் ஆனது.
 
இதையடுத்து ரஜினியின் சாதனையை முறியடித்த பெருமை அஜ்த் ரசிகர்களையே சேரும்.