ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (07:45 IST)

என்ன பண்ணி வெச்சிருக்க? கோட் ட்ரெய்லரை பார்த்த அஜித்தின் ரியாக்‌ஷன்!? - வெங்கட் பிரபு சொன்ன தகவல்!

Ajithkumar

ரசிகர்களிடையே நீண்ட எதிர்பார்ப்பில் இருந்த ‘தி கோட்’ படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில் ட்ரெய்லரை பார்த்து அஜித் என்ன சொன்னார் என்பதை வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

 

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் GOAT’. இந்த படத்தில் பிரபுதேவா, ப்ரஷாந்த், அஜ்மல், ப்ரேம்ஜி, சினேஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 

இந்த படத்தின் பாடல்கள் முன்னதாக வெளியான நிலையில் ‘ஸ்பார்க்’ பாடலில் இளம் விஜய்யை காட்டுவதற்காக செய்யப்பட்ட டீ ஏஜிங் தொழில்நுட்பம் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிரைலர் அந்த பிரச்சினைகளை சரிசெய்து வெளியிடப்பட்டுள்ளது.

 

இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ள நிலையில், இந்த ட்ரெய்லரை அஜித்தும் பார்த்ததாக வெங்கட்பிரபு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

 

ட்ரெய்லரை பார்த்த அஜித்குமார் ”டேய்.. ட்ரெய்லர் சூப்பரா இருக்குடா! என்னோட வாழ்த்துகளை விஜய் மற்றும் படக்குழுவுக்கு சொல்லிடு” என்று சொன்னாராம். 

 

Edit by Prasanth.K