வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (00:31 IST)

அஜித்தின் 30 ஆம் ஆண்டு வெற்றிப் பயணம்! ரசிகர்கள் புதிய திட்டம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார்.

இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். போனி கப்பூர் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

சமீபத்தில் நாங்க வேற மாரி என்ற பாடல் வெளியாகி சாதனை படைத்தது.

இந்நிலையில், நாளை 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட அஜித் ரசிகர்கள், சினிமாவில் அஜித்தின் 30 ஆம் ஆண்டு வெற்றிப் பயணத்தை முன்னிட்டு ரத்த தானம் முகாம்  ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.