வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2020 (21:57 IST)

'வலிமை’ படத்திற்காக சம்பளத்தை குறைத்தாரா அஜித்?

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் திரை உலகில் உள்ள தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இதனை கணக்கில் கொண்டு பல நடிகர் நடிகைகள் தங்கள் சம்பளத்தை தாமாகவே முன்வந்து குறைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
 
மேலும் ஒரு சில முன்னணி நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த நிலையில் அஜித் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ’வலிமை’ படத்திற்காஅ சம்பளத்தை ஒரு குறிப்பிட்ட சதவீதம் குறைத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
இது குறித்து அவர் தயாரிப்பாளர் போனி கபூருக்கு இமெயில் ஒன்றை அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது ஆனால் அஜித்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் இதுகுறித்து கூறிய போது ’வலிமை’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் போது அப்போதைய சூழ்நிலையை பொறுத்து தேவைப்பட்டால் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அஜித் மெயில் அனுப்பி உள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்
 
‘வலிமை’ திரைப்படம் ரிலீஸின்போது கொரோனா வைரஸ் பரபரப்பு முற்றிலும் முடிந்து இயல்பு நிலை திரும்பி விட்டால் அஜித் சம்பளத்தை குறைக்க மாட்டார் என்றும் இதே நிலை நீடித்தால் அவர் சம்பளத்தை குறைத்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது