செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 12 மே 2023 (21:58 IST)

வேற மாதிரி புதுசா, தரமா இருக்கனும் - மகிழ்திருமேனிக்கு கண்டீஷன் போட்ட அஜித்!

துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் அவரின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டார் . 
 
இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இப்படத்தின் டைட்டில் விடாமுயற்சி என அஜித்தின் ராசியான எழுத்தான " V" லெட்டரில் துவங்குகிறது. இப்படத்தில் திரிஷா ஹீரோயினாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளிவந்தது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது அஜித் தனது தோற்றத்தை வித்யசமாகவும், புதிதாகவும் இருக்கவேண்டும் என இயக்குனர் மகிழ் திருமேனியிடம் ஆலோசித்து  கலர் அடிக்கலாமா அல்லது வெள்ளை முடியுடன் வேறு ஏதாவது கெட்டப் போடலாமா என யோசித்து அதற்கான வேளையில் முழுவீச்சில் இறங்கியுள்ளாராம். துணிவு படத்தில் இருந்ததை போன்றே வேறமாதிரி நியூ லுக்கில் அஜித் வரப்போகிறார்.