அஜித்தின் படம் ரொம்ப பிடித்துள்ளது - மெகா ஸ்டாரின் பதில்...தல ரசிகர்கள் ஹேப்பி

mega star
sinojkiyan| Last Updated: சனி, 28 செப்டம்பர் 2019 (15:08 IST)
’சைர நரசிம்ம ரெட்டி ’என்ற பிரமாண்ட படத்தின் புரோமோசன் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் நாயகன் மற்றும் ஆந்திர சினிமாவின்  மெகா ஸ்டாருமான சிரஞ்சீவி அஜித்தின்  படத்தைப் பற்றி பேசியுள்ளார்.
ராம் சரண் தயாரிப்பில், சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப்பச்சன் விஜய் சேதுபதி,சுதீப் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள சைர நரசிம்ம ரெட்டி இப்படம் அக்டோபர் - 2 ஆம் தேதி  உலகம் முழுவதும் ரிலீசாகிறது.
 
இதையொட்டி சைர நரசிம்ம ரெட்டி படத்தை விளம்பரப்படுத்தும் புரொமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதில், நடிகை நயன்தாரா புரோமோஷன் கலந்துகொள்ள மாட்டேன் என தெரிவித்துவிட்டதால் சர்ச்சையானது, எனவே மெகா ஸ்டார் இந்த படத்தினை விளம்பரப்படுத்தி வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் அவரிடம் தமிழ்த்திரையிலைல் ரஜினி, கமல் தவிர மற்ற எந்த நடிகரை பிடிக்கும் என கேள்வி கேள்வி எழுப்பப்பட்டது.
ajith
இதற்கு விஜய், அஜித்,சூர்யா, விக்ரம் ஆகியோர் பெயரை தெரிவித்துள்ளார். மேலும்,அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் , விசுவாசம்  மற்றும் சமீபத்தில்  வெளியான நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் தனக்குப் பிடித்ததாகக் தெரிவித்ததுடன், அஜித் இந்தக்  கதைகளைத்  தேர்வு செய்துள்ளதையும் பாராட்டியுள்ளார். இதனால் அஜித்தின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :