அஜித் ஒரு ஓப்பன் புக்: பொதுநிகழ்ச்சியில் பதிலளித்த அருண்விஜய்

ajith
Last Modified வெள்ளி, 15 மார்ச் 2019 (19:14 IST)
ஒரு படத்தின் ரிலீசின்போது அந்த படத்தை புரமோஷன் செய்ய படக்குழுவினர்கள் அஜித் அல்லது விஜய் பெயரை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் அருண்விஜய் நடித்த 'தடம்' திரைப்படம் சூப்பர்ஹிட் ஆன பின்னர் அவர் அஜித் குறித்த தனது கருத்தை ஒரு பொது நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
அஜித் ஒரு ஓப்பன் புக் என்றும், அவரை பற்றி ரகசியம் எதுவும் இல்லை என்றும் கூறிய அருண்விஜய், அவருடன் நடித்தபோது அவரிடம் இருந்து பல அறிவுரைகள் பெற்றதாகவும், அதன்பின்னர் தனது பாதையே மாறியதாகவும் தெரிவித்தார். மேலும் அஜித் மிக எளிமையான, மனிதநேயம் உள்ளவர் என்றும், அஜித் தனது ரசிகர்கள் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் நயன்தாரா குறித்து அருண்விஜய் கூறியபோது, 'நயன்தாரா ரொம்ப அழகானவங்க, நல்ல நடிகை என்றார். மேலும் தனது படத்தில் அவர் நாயகியாக நடிப்பாரா? என்று எனக்கு தெரியாது என்றும், ஒருவேளை நடக்கலாம் என்றும் அருண்விஜய் கூறினார்.இதில் மேலும் படிக்கவும் :