திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 27 பிப்ரவரி 2022 (10:31 IST)

மூன்றே நாளில் ரூ.100 கோடி வசூலை தாண்டியது ‘வலிமை’: ஹூமா குரேஷி டுவிட்!

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் கடந்த 24ஆம் தேதி வெளியான நிலையில் மூன்று நாட்களில் இந்தப் படம் உலகம் முழுவதும் ரூபாய் 100 கோடி வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது.
 
இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 180 கோடி என்ற நிலையில் 65 கோடி இந்த படத்தின் அனைத்து மொழி சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமம் விற்பனையாது. இதனை அடுத்து தற்போது 100 கோடி வசூல் செய்தது அடுத்து இன்னும் 15 கோடி மட்டுமே தயாரிப்பாளர் செலவு செய்த தொகை வர வேண்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றும் நாளையும் கிட்டத்தட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ‘வலிமை’ திரைப்படம் ஓடி வருவதால் நாளை முதல் இந்த திரைப்படம் லாபத்தை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது