திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (21:18 IST)

’வாரிசு’ படத்தை முந்தியது ‘துணிவு’: பரபரப்பு தகவல்

thunivu
விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே தினத்தில்தான் அஜித்தின் துணிவு படமும் வெளியாகும் என்று கூறப்பட்டது. 
 
ஆனால் தற்போது வந்த தகவலின் படி அஜித்தின் துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர்களிடமிருந்து தகவல்கள் கசிந்துள்ளன 
 
பொதுவாக அஜித்தின் படங்கள் எப்போதுமே செண்டிமெண்ட் ஆக வியாழக்கிழமை ரிலீசாவது வழக்கம். ஆனால் இம்முறை ஜனவரி 11ஆம் தேதி புதன்கிழமை ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடதக்கது. 
 
அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில் இந்த இரண்டு படங்களுமே வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. 
 
edited by siva