ஐரோப்பா சுற்றுலா… கப்பலில் ரேசர் உடையில் அஜித்… வைரலாகும் புகைப்படங்கள்!
அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இதுவரை நடந்த படப்பிடிப்பில் 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஐரோப்பா முழுவதும் இரு சக்கரவாகனத்தில் பயணம் செய்து வரும் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இப்போது அஜித் கப்பலில் ரேஸர் உடையோடு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.