திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : செவ்வாய், 8 அக்டோபர் 2019 (13:39 IST)

செல்பி எடுக்க நின்ற அஜித் - ரசிகர் சொன்ன ஒரே வார்த்தையால் கடுப்பாகி சென்ற தல - வீடியோ

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இணைந்து தனது 60-வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.  அஜித் பைக் ரேசர் மற்றும் போலீஸ் என இரு வேடத்தில் நடிக்கவுள்ள இப்படத்திற்கு AK 60 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. 


 
இப்படத்திற்காக அஜித் தனது தோற்றத்தை மாற்றி ஃபிட்டாக வைத்துள்ளார். மேலும் அடிக்கடி அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் அவரது நியூ லுக் போன்றவை ட்விட்டரை தெறிக்கவிட்டது.  அஜித் ரசிகர்கள் அனைவரும் தல 60 என்ற ஹேஸ்டேக்கில் அஜித் பற்றிய சமீபத்திய தகவல்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், நடிகர் அஜித் துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக டெல்லிக்கு சென்றுள்ளார். அப்போது டெல்லி ஏர்போர்ட்டில் அஜித்தை கண்டவுடன் அங்கிருந்த அவரது ரசிகர்கள் செல்பி எடுக்க ஓடி வந்தனர். அப்போது ரசிகர்களுக்காக புகைப்படம் எடுக்க நின்றார் அஜித். உடனே அங்கிருந்தவர்கள் கடவுளே, கடவுளே என கோஷமிட்டதால் கடுப்பான அஜித் புகைப்படம் எடுப்பதை தடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.