1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 ஜனவரி 2023 (12:24 IST)

நாட்டிலேயே மிகப்பெரிய கட் அவுட்! – துணிவு படைத்த புதிய சாதனை!

Thunivu Banner
உலகம் முழுவதும் அஜித் நடித்துள்ள ’துணிவு’ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் மலேசியாவில் துணிவு படத்திற்கு வைக்கப்பட்ட கட் அவுட் சாதனை படைத்துள்ளது.

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் ரிலீஸாகியுள்ள படம் ‘துணிவு’. நேற்று இந்த படம் உலகம் முழுவதும் வெளியான நிலையில் ஹவுஸ்புல் காட்சிகளாக பல பகுதிகளிலும் ஓடி வருகிறது.

மலேசியாவிலும் துணிவு படம் வெளியான நிலையில் அங்குள்ள அஜித் ரசிகர்கள் அஜித்திற்கு பிரம்மாண்டமான கட் அவுட்டை வைத்தனர். படம் ரிலீஸ் செய்யப்பட்ட பிஜே எல்.எப்.எஸ் ஸ்டேட் சினிப்ளக்ஸ் திரையரங்கின் முன்பாக 30 அடி உயரத்திற்கு கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது.

மலேசியாவில் முதன்முறையாக ஒரு நடிகருக்கு வைக்கப்பட்ட மிக உயரமான கட் அவுட் இதுதான் என புதிய சாதனையை அந்த கட் அவுட் படைத்துள்ளது. இந்த சாதனை மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதுடன், அதற்கான சான்றிதழ்ல் திரைப்பட விநியோகஸ்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Edit by Prasanth.K