தல ரசிகர்கள் ஹேப்பியா ஹேப்பி ..! விஸ்வாசம் படத்துக்கு விடியற்காலை காட்சி..!
தல அஜித்தின் ரசிகர்களுக்கு விஸ்வாசம் படம் குறித்த ருசிகர தகவல் ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் வரும் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் 4 ஆவது முறையாக இணைந்து தல அஜித் இப்படத்தில் நடித்துள்ளார். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ளார்.
யோகி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், வரும் ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் முதல் காட்சி சென்னையில் 1 மணிக்கு துவங்கப்படும் என்று நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை அறிந்த தல ரசிகர்கள் இப்போதே அதிகாலை காட்சிக்கு அலை மோதுகின்றனர்.