பாட்டெழுதி அஜித்தை மயக்கிய விக்னேஷ் சிவன்… இப்படிதான் கிடைத்ததா சான்ஸ்?
நடிகர் அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
அஜித்குமார் – எச்.வினோத் கூட்டணியில் சமீபத்தில் வலிமை படம் வெளியாகி வசூலை குவித்துள்ளது. இதையடுத்து அஜித்தின் 61வது படமும் எச்.வினோத் இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதை தொடர்ந்து அஜித்தின் 62வது படம் குறித்த ஊகங்களும் எழுந்துள்ளன.
இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும், நயன்தாரா மற்றும் முன்னணி நடிகர்கள் நடிக்க அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு எப்படி விக்னேஷ் சிவனுக்குக் கிடைத்தது என்பது பற்றிய தகவல்கள் பேசப்பட்டு வருகின்றன.
சில மாதங்களுக்கு முன்னர் நயன்தாரா விக்னேஷ் சிவன் –அஜித் சந்திப்பை ஒருங்கிணைத்துக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அப்போது விக்னேஷ் சிவன் ஒரு கதையை சொல்லி உள்ளதாக சொலல்ப்படுகிறது. மேலும் அஜித்துக்கு விக்கி மேல் கவனம் செல்ல வலிமை படத்தில் அவர் எழுதிய பாடல்கள்தான் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக அந்த அம்மா செண்ட்டிமெண்ட் பாடல் அஜித்தை மிகவும் கவர்ந்ததாக சொல்லப்படுகிறது.