செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 18 ஜூன் 2022 (09:25 IST)

இங்கிலாந்தில் பைக் சுற்றுலா… இணையத்தில் வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

நடிகர் அஜித் தற்போது இங்கிலாந்தில் பைக் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.


இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இதுவரை நடந்த படப்பிடிப்பில் 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.


இந்நிலையில் தற்போது இங்கிலாந்துக்கு பயணம் செய்துள்ள அஜித் அங்கு பைக் சுற்றுலா மேற்கொண்டுள்ளார். இது சம்மந்தமாக அவர் தன் குழுவினரோடு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. சில மாதங்களுக்கு முன்னர் அஜித் இதுபோல இந்தியா முழுவதும் பைக் சுற்றுலா மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.