1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2024 (15:01 IST)

விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் எப்போது?... விருது விழா மேடையில் அப்டேட் கொடுத்த அர்ஜுன்!

அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கி நிறைவடைந்துள்ளது. இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாகும் என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த படத்தின் ரிலீஸ் டிசம்பர் 20 ஆம் தேதிக்கு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் சைமா திரைப்பட விழாவுக்காக துபாய் சென்றுள்ள நடிகர் அர்ஜுன் விழா மேடையில் பேசும்போது “விடாமுயற்சி க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கை சமீபத்தில் முடித்தோம். படம் விரைவில் ரிலீஸாகும். இரண்டு மூன்று மாதங்களில். அனேகமாக டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். அதனால் படம் கண்டிப்பாக டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாகிவிடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.