அஜித்தின் ஜிம் டிரைனர் இந்த பெண்தான் – பல முன்னணி ஹீரோக்களுக்கும் இவர்தானாம்!
ஹைதராபாத்தைச் சேர்ந்த கிரண் டேம்லா என்ற பெண்தான் இப்போது அஜித்தின் உடற்பயிற்சி நிபுணராக உள்ளதாக சொல்லப்படுகிறது.
நடிகர் அஜித் இப்போது வலிமை படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இந்த படத்துக்காக நல்ல கட்டுமஸ்தான உடல் தோற்றத்தில் தோன்ற வேண்டும் என்று அதன் இயக்குனர் ஹெச் வினோத் முன்பே அஜித்திடம் தெரிவித்திருந்தார். அதனால் இப்போது இந்த லாக்டவுனை பயன்படுத்தி அஜித் தனது உடல்வாகை நன்கு மாற்றி வருகிறார்.
இதற்காக அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த கிரண் டேம்லா என்ற டிரெயினரை நியமித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் உள்ள பல முன்னணி ஹீரோக்களின் ஜிம் டிரெய்னராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.