1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 16 மார்ச் 2023 (09:19 IST)

மேலும் தாமதம் ஆகும் அஜித் 62 அறிவிப்பு.. காரணம் என்ன?

அஜித் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதுவரை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்குக் காரணம் அஜித்தான் என சொல்லப்படுகிறது. இன்னும் திரைக்கதை பணிகளை மகிழ் திருமேனி, முழுமையாக முடிக்கவில்லை. பணிகள் முழுவதும் முடிந்ததும், அறிவிப்பை வெளியிட்டுக் கொள்ளலாம் என அஜித் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் வெளியாகியுள்ள தகவலின் படி, படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏப்ரல் மாதத்தில்தான் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.