ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு!
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மலையாளத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த படத்திற்கு ஹெர் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரபல மலையாள இயக்குனர் லிஜின் ஜோன்ஸ் என்பவர் இந்த படத்தை இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் இரண்டு வெற்றி படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஊர்வசி, பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரம்யா நம்பீசன், லிஜோமொல் ஜோஸ், பிரதாப்போத்தன், குரு சோமசுந்தரம், ராஜேஷ் மாதவன் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது