1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஜூலை 2020 (15:21 IST)

ஐஸ்வர்யாராய்க்கும் கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சி தகவல்

ஐஸ்வர்யாராய்க்கும் கொரோனா பாசிட்டிவ்:
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் ஆனால் அதே நேரத்தில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஜெயா பச்சன், ஐஸ்வர்யா ராய், மற்றும் ஆராத்யா ஆகியோர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற செய்தியையும் பார்த்தோம் 
 
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவருக்கும் இரண்டாம் கட்ட பரிசோதனை எடுக்கப்பட்டதாகவும் இந்த பரிசோதனையின் முடிவு சற்று முன் வெளியான நிலையில் இருவருக்கும் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
இதனை அடுத்து ஐஸ்வர்யாராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா ஆகிய இருவரும் அமிதாப், அபிஷேக் சிகிச்சை பெற்று வரும் அதே மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
 
அமிதாப் குடும்பத்தில் அமிதாப், அபிஷேக், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா ஆகிய 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது இருப்பினும் நால்வருக்குமே இலேசான அறிகுறிதான் என்பதால் எந்தவித ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது