செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (19:08 IST)

ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை இயக்குகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? எதிர்பார்ப்பை ஏற்படுத்திய புகைப்படம்!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் இதுவரை இரண்டு படங்கள் வெளியாகியுள்ளன.

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ”3 ”மற்றும் ”வை ராஜா வை” ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த இரண்டு படங்களும் வசூல் ரீதியாக பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்போது அவர் முசாஃபிர் என்ற இசை ஆல்பத்தை இயக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்து முடிந்தது. அடுத்தடுத்து தனது சினிமா பணிகளில் கவனம் செலுத்திவரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது அடுத்த படத்துக்கான வேலையில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் நடிகர் ராகவா லாரன்ஸோடு இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் “workmode on” எனக் குறிப்பிட்ட்ள்ளார். இதனால் இவர்கள் இருவர் கூட்டணியில் ஒரு படம் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் இந்த சந்திப்புப் பற்றி பேசியுள்ள ராகவா லாரன்ஸ் ‘நாங்கள் சந்தித்ததைப் பற்றி எனது தங்கை ஐஸ்வர்யா அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பார்’ எனக் கூறியுள்ளார்.