செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 25 மே 2017 (15:27 IST)

அந்த விஷயத்தில் தனுஷ் மீது கடுப்பில் இருக்கும் ஐஷ்வர்யா ராஜேஷ்!!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் வடசென்னை. இந்த படம் நீண்ட காலமாக இன்று தொடங்கும், நாளை தொடங்கும் என்று இழுத்துக்கொண்டே போகிறது.


 
 
இந்நிலையில், படத்தில் நாயகியான ஐஷ்வர்யா ராஜேஷ் சம்பள விஷயத்தில் தனுஷ் மீது கடுப்பில் உள்ளார் என செய்தி உலாவர துவங்கியுள்ளது. ஐஷ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் நடிப்பதற்கு காரணம் அமலா பால் படத்தில் இருந்து விலகியதே.
 
ஆனால், இந்த படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தது சமந்தா. அவர் படத்திற்காக வடசென்னை வாழ் சேரி மக்கள் மத்தியில் எல்லாம் பேசி பழகினார். ஆனால், சமந்தாவிற்கு திருமண ஏற்பாடு முடிவு செய்யப்பட்டதால் படத்தில் இருந்து விலகினார். இந்த படத்திற்கு சமந்தாவிற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது.
 
இதற்கு பின்னர் படத்தில் அமலா பால் கமிட் ஆன போது அவருக்கு 80 லட்சம் சம்பளமாக பேசப்பட்டது. இந்நிலையில், ஐஷ்வர்யா ராஜேஷுக்கு 40 லட்சமே சம்பளமாக வழங்கப்பட உள்ளதாம்.
 
எனவே, அளை பார்த்து சம்பளம் போடுகிறார் தனுஷ் என்ற கடுப்பில் உள்ளாராம் ஐஷ்வர்யா ராஜேஷ்.