நார்மல் ஃபீபருக்கு ரூ.1 லட்சத்தை லவட்டிய டாக்டர்: புகைச்சலில் நடிகை!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மெய் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணம் என்னவென தெரிவித்துள்ளார்.
கனா படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள படம் மெய். இந்த படத்தை கமல்ஹாசன், சித்திக், ஜீத்து ஜோசப் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கியுள்ளார்.
வருகிற 23 ஆம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என ஐஸ்வர்யா ராஜேஷ் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,
காய்ச்சலுக்காக சிகிச்சை எடுக்க போய் ரூ.1 லட்சம் மருத்துவமனைக்கு கட்டணமாக செலுத்தினேன். மருத்துவர்களின் கட்டாயத்தின் பேரில் பலமுறை தேவையற்ற பரிசோதனைகளை செய்ததால் இந்த தொகையை கட்ட நேர்ந்தது.
இதுபோன்று மருத்துவத்துறையில் மலிந்து கிடக்கும் முறைகேடுகள் களையப்பட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.