செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (16:11 IST)

என்னை விட ஐஸ்வர்யா ராய்க்கு சம்பளம் அதிகம்- முன்னணி நடிகர் 'ஓபன் டாக்'

nandhini aiswaryarai
என்னை விட ஐஸ்வர்யா ராய்க்கு சம்பளம் அதிகம் என பிரபல முன்னணி நடிகர் ஓபனாக பேசியுள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ்   நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் கடுவா. இப்படம் ரசிகர்கள் மத்தில்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், நிருபர்கள் கேட்ட  கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.


























அப்போது, சினிமாவில் ஆண் பெண் ஊதியத்தில்  இருக்கும் முரண்பாடுகள் குறித்து ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்,  சினிமாவில் ஆண் – பெண் விதிதியாம் இன்றி ஊதியம் வழக்குவதில் எனக்கு  உடன்படு உள்ளது, ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கலுண்டாகிறது என்று, ராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் நடித்தபோது, என்னைவிட அவருக்கு சம்பளம் அதிகம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கடுவா படத்தில் இடம்பெற்றிருந்த மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய வசனங்களுக்கு பிரத்விராஜ் மன்னிப்புக் கேட்டது குறிப்பிடத்தக்கது.