புதன், 13 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 13 ஜனவரி 2023 (09:36 IST)

நீங்க நெனைக்குற மாதிரி ஒன்னுமில்ல… அர்ஜுன் தாஸுடனான புகைப்படம் குறித்து ஐஸ்வர்ய லஷ்மி பதில்!

பொன்னியின் செல்வன் மற்றும் கட்டா குஸ்தி ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஐஸ்வர்யா லஷ்மி, சமீபத்தில் பகிர்ந்த புகைப்படம் வைரல் ஆனது.

அர்ஜுன் தாஸை கட்டி அணைத்தபடி இருக்கும் இந்த புகைப்படத்தில் கீழே லவ் எமோஜியை அவர் பதிவு செய்த அடுத்த இருவரும் காதலிக்கிறார்கள் என  ரசிகர்கள் நினைக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இதுபற்றி ஐஸ்வர்யா லஷ்மி அந்த புகைப்படத்துக்கு விளக்கம் அளித்துள்ளார். அதில் “நீங்கள் நினைப்பது போல எங்களுக்குள் எதுவும் இல்லை. நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவேற்றினேன். மற்றபடி அர்ஜுன் தாஸ் ரசிகைகளுக்கு ஒரு செய்தி. அவர் இன்னமும் உங்களுக்கே” எனக் கூறியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் திருமணம் பற்றி பேசிய அவர் “எனக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை. நான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை” எனக் கூறியிருந்தார். ஆனால் அப்படி சொல்லி சில மாதங்களுக்குள்ளாகவே காதலில் விழுந்துள்ளார்.