1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 24 மார்ச் 2019 (20:35 IST)

ராதாரவிக்கு நயன்தாரா கொடுத்த பதிலடி!

நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' படத்தின் புரமோஷன் விழாவில் பேசிய நடிகர் ராதாரவி, அந்த படத்தின் நாயகியான நயன்தாரா மீது சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு விக்னேஷ் சிவன் உள்பட திரையுலகினர் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராதாரவியின் சகோதரியும் நடிகையுமான ராதிகாவும், ராதாரவி பேசியது தவறு என கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் நயன்தாரா  நடித்த 'ஐரா' படத்தின் வீடியோ கிளிப் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் 'உன்னை மாதிரி ஆளுங்க இருக்குறனாலதான், ஃபேமிலியை சப்போர்ட் பண்ற பொண்ணுங்க வெளியே வந்து நிம்மதியா வேலை செய்ய முடியலை' என்ற வசனத்தை நயன்தாரா பேசுவது போல் உள்ளது.
 
இந்த வசனம் 'ஐரா' படத்திற்காக பேசிய வசனம் போல் இருந்தாலும் ராதாரவிக்கு பதிலடி கொடுப்பது போன்றே இருப்பதாக நயன்தாராவின் ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.