ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 8 நவம்பர் 2023 (10:38 IST)

ராஷ்மிகாவை அடுத்து இணையத்தில் பரவும் கேத்ரினா கைஃபின் டீப் ஃபேக் வீடியோ!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கீத கோவிந்தம், தேவ்தாஸ், டியர் காம்ரேட், சுல்தான்,. புஷ்பா, வாரிசு, அனிமல் ஆகிய படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமாக உள்ளார். இந்த நிலையில்,  ஏஐ தொழில் நுட்பத்தால் ஆபாசமாக உருவாக்கப்பட்ட தனது DeepFake Edit வீடியோ இணையதளத்தில் வைரலாகிவரும் நிலையில் நடிகை ராஷ்மிகா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் “தொழில்  நுட்பம் மூலம் இப்படி தவறானப் பயன்படுத்தப்படுவதை பார்த்தால் பயமாக இருக்கிறது. இது எனது பள்ளி, கல்லூரி காலங்களில் நடந்திருந்தால் அதனை எப்படி சமாளித்திருப்பேன் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்படும் முன்பு இதுபற்றி தெரியப்படுத்த வேண்டும்” என வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் இப்போது ராஷ்மிகாவின் வீடியோ போலவே காத்ரினா கைஃபின் டீப் ஃபேக் வீடியோ ஒன்று இணையத்தில் பரவ தொடங்கியுள்ளது. தொழில் நுட்பத்தை இதுபோல தவறாக பயன்படுத்துபவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து இதுபோல நடிகர்களின் போலி வீடியோக்கள் பரவுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.