புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 10 டிசம்பர் 2019 (11:20 IST)

ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ’தலைவர் 168’ திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரகாஷ்ராஜ் இணைந்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ’தலைவர் 168’ படத்தின் நாயகியாக நடிகை மீனா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
ஏற்கனவே ரஜினிக்கு ஜோடியாக எஜமான், வீரா மற்றும் முத்து ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை மீனா, 24 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
திருமணத்திற்குப் பின் அதிக திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த நடிகை மீனா, நல்ல கேரக்டர் கிடைத்தால் மட்டுமே நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது அவர் நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் மீண்டும் ’தலைவர் 168’ படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆகவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது 
 
தலைவர் 168 படத்தில் நடிகை மீனா மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது