வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (16:58 IST)

15 ஆண்டுகளுக்கு பின் சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் பிரபல் தமிழ் நடிகை!

15 ஆண்டுகளுக்கு பின்னர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் தமிழ் நடிகை ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது
 
மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து முடித்துள்ள ஆச்சார்யா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற லூசிபர் என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார் 
 
இந்த படத்தை மோகன் ராஜா இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருவது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் லூசிபர் ஒரிஜினல் படத்தில் காதல் காட்சிகள் இல்லையென்றாலும் தெலுங்கு ரீமேக்கில் காதல் காட்சிகளை இணைக்க மோகன்ராஜா திட்டமிட்டுள்ளார் 
 
இதனை அடுத்து இந்த படத்தில் சிரஞ்சீவியின் காதலியாக நடிக்க நடிகை த்ரிஷாவை அவர் தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி விட்டதாகவும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 
இதற்கு முன்னர் கடந்த 2006ஆம் ஆண்டு ஸ்டாலின் என்ற படத்தில் சிரஞ்சீவி மற்றும் திரிஷா ஜோடியாக நடித்தனர். அதன் பின்னர் 15 ஆண்டுகளுக்கு பின் தற்போது இதே ஜோடி மீண்டும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது