1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (15:59 IST)

அதிதிக்காகத்தான் படம் பார்த்தோம்: ரசிகர்கள் விமர்சனத்தால் சூர்யா-கார்த்தி அதிர்ச்சி!

viruman
கார்த்தி நடித்த விருமன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த படம் முத்தையாவின் வழக்கமான என்றும் பருத்திவீரன் படத்தில் பார்த்த நடிப்பு தான் இந்த படத்திலும் கார்த்தியை பார்க்க முடிகிறது என்றும் பலரும் நெகட்டிவ் விமர்சனம் தந்துள்ளனர்
 
 மேலும் அடுத்த காட்சி என்ன என்பதை முன்கூட்டியே யூகிக்க முடியும் வகையில் தான் படம் நகர்கிறது என்றும் இந்த படத்தின் ஒரே பிளஸ் என்னவென்றால் அது அதிதி ஷங்கர் தான் என்றும் தெரிவித்தனர் 
 
படம் பார்த்த பல இளைஞர்கள் அதிதிக்காகத்தான் இந்த படத்தை பார்க்க வந்தோம் என்றும் அவர் எங்களை ஏமாற்ற வில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிப்பில் உருவான இந்த படம் கார்த்தியின் மார்க்கெட்டை உயர்த்தும் என்று நினைத்து கொண்டிருக்கும் நிலையில் அதிதிக்கு மட்டுமே பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருப்பது சூர்யா கார்த்தி தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது