நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் அளித்த நடிகை.. திடீரென வாபஸ் பெற்றதால் பரபரப்பு..!
பிரபல மலையாள நடிகர் முகேஷ் மீது பாலியல் புகார் அளித்த நடிகை ஒருவர் அந்த புகாரை வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசின் ஆதரவு தனக்கு இல்லாததால் புகாரை வாபஸ் பெறுவதாக அவர் கூறியிருப்பது மலையாள திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள திரை உலகில் பெண்கள் சந்திக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து விசாரணை செய்ய, நீதிபதி ஹேமா தலைமையில் கேரளா அரசு குழு அமைத்தது. இந்த குழு அறிக்கை வெளியிட்ட பிறகு, மலையாள திரை உலகைச் சேர்ந்த பல நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வெளியிட்டனர்.
அந்த வகையில், பிரபல மலையாள நடிகர் முகேஷ் மீது ஒரு நடிகை பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். தற்போது, அந்த புகாரை அவர் திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளார். அரசின் ஆதரவு தனக்கு இல்லை என்பதாலும், இந்த வழக்கை தொடர முடியாது என்பதாலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
முகேஷ் மட்டுமின்றி நடிகர் ஜெயசூர்யாவும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறியுள்ளார்.. இந்த வழக்குகளை சந்திக்க அரசின் ஆதரவு இல்லாமல் தன்னால் வெற்றி பெற முடியாது என அவர் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva