நெற்றி பொட்டையே ராமராக மாற்றி பக்தியை வெளிப்படுத்திய நடிகை !
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த அயோத்தி நில விவகாரம் முடிந்து தற்போது அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த ராமர் கோவில் திருவிழாவில் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மக்கள் தம் வீடுகளில் இருந்தபடி தொலைக்காட்சியில் நேரடியாக ராமர் கோவில் பிரதிஷ்டையைப் பார்த்து விளக்கேற்றி வைத்து வழிபட்டனர்.
பிரபல நடிகை சுகன்யா தனது நெற்றியில் ராமரின் உருவத்தை பொட்டாக வைத்துள்ளார். இவரது போட்டோ சமூக வலைதளங்ட்களில் வைரல் ஆகி வருகிறது.