புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 1 டிசம்பர் 2020 (20:37 IST)

பிரபல இயக்குந் மீது பாலியல் புகாரளித்த நடிகை !

பிரபல இயக்குநர் தன்னைக் காதலித்து கர்ப்பமாக்கி விட்டதாக ஒரு நடிகை காவல்துறையில் புகாரளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் வசித்துவருபவர் பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர், இன்று காவல்துறையில் ஒரு புகாரளித்துள்ளார்.

அதில், பிரபல காஸ்டிங் இயக்குநர் ஆயுஷ் திவாரி தன்னுடன் இரு ஆண்டுகள் பழகினார். பின்னர் பாலிவுட் மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி என்னிடம் பாலியல் உறவு வைத்துக்கொண்டார்.

இதில் நான் கடந்த ஜூலை மாதம் கர்ப்பம் அடைந்தேன். இதுகுறித்துக் கூறி என்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அவரிடம் கூறினேன். ஆனால் அவர் திருமணத்திற்கு மறுத்து என்னை அவமானப்படுத்தினார்.  எனவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் இயக்குநர் ஆயுஸ் திவாரியிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.