செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 ஜூன் 2023 (07:33 IST)

கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்த பிரபல நடிகை!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக இருந்து வரும் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.

கோவை மேற்கு தொகுதியில் போட்டியில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் வானதி சீனிவாசனிடம் தோற்றார். அதன் பின்னர் கட்சி ஆக்டிவ்வாக இருப்பது போல தெரியவில்லை.

விரைவில் பாராளுமன்ற தேர்தல் வரும் நிலையில் இப்போது கட்சிப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிரபல குணச்சித்திர நடிகையாக இருக்கும் வினோதினி கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதிமய்யத்தில் இணைந்துள்ளார்.