இன்ஸ்டா பதிவுகளை திடீரென டெலீட் செய்த திரிஷா - மனகஷ்டம் காரணம்?
தமிழ் சினிமாவில் முதன்முறையாக 21 ஆண்டுகள் கடந்த பின்னும் உச்ச அந்தஸ்த்தில் வலம் வரும் ஒரே நடிகை த்ரிஷா மட்டும் தான். பல படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா தற்போது நயன்தாரா ஸ்டைலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். எவர்க்ரீன் நடிகையாக வலம் வரும் திரிஷா 37 வயதிலும் பலரது கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார்.
கொரோனா ஊரடங்கில் முழு நேரமும் வீட்டில் இருந்து வந்தாலும் அவ்வப்போது மட்டும் இன்ஸ்டாவில் எதையேனும் பதிவிட்டு அப்பப்போ வந்து தலை காட்டுவார். இந்நிலையில் திரிஷா திடீரென தனது இன்ஸ்டாவில் இருந்த பழைய புகைப்படங்கள் அனைத்தையும் டெலீட் செய்துள்ளார் தற்ப்போது 7 புகைப்படங்கள் மட்டுமே உள்ளது.
ஏன்? என்ன ஆனது. த்ரிஷா அக்கவுண்ட்டை யாரேனும் ஹேக் செய்து விட்டார்களா என ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வர... அப்படி எதுவும் இல்லை. உண்மையில் என்னுடைய கணக்கு ஹேக் ஆகவில்லை என த்ரிஷா தெரிவித்திருக்கிறார். சரி வேறு என்ன...? எதாவது மனக்கஷ்டத்தில் இப்படி செய்திருப்பார் என ஆளாளுக்கு பேசி வருகின்றனர். இருந்தும் இது குறித்து திரிஷாவே தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளார்.