1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 1 ஜனவரி 2024 (16:15 IST)

க்யூட்டோ க்யுட்டு… சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது தவிர அவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ள குஷி படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இவை தவிர அவர் கைவசம் வேறு படங்கள் இல்லை.

இந்த இரு பிராஜக்ட்களை முடித்துவிட்டு  அவர், சினிமாவில் இருந்து ஒரு வருடம் இடைவெளி எடுத்துக் கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் தசை அழல்சுழற்சி நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டார். ஓய்வுக்காக தயாரிப்பாளர்களிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் அவர் திருப்பிக் கொடுத்து விட்டதாக சொல்லப்பட்டது.

இப்போது அவர் சிட்டாடல் என்ற வெப் தொடரில் மட்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் பகிர்ந்துள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.