புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 15 ஜூன் 2022 (10:37 IST)

வாய் விட்டு வம்பில் மாடிய சாய் பல்லவி!

சாய் பல்லவி நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள விராட பர்வம் படத்தின் ப்ரமோஷனின் போது பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 

 
நடிகை சாய் பல்லவி தமிழ் பெண்ணாக இருந்தாலும் மல்லுவுட்டில் அறிமுகமாகி தற்போது டோலிவுட்டை கலக்கி வரும் முன்னணில் நடிகையாக உள்ளார். தெலுங்கு சினிமாவில் அதிகம் காணப்படும் சாய் பல்லவி தனது சமீபத்திய பேட்டியால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், அவர் நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள விராட பர்வம் படத்தின் ப்ரமோஷனின் போது பேசியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 
 
அவர் தனது பேட்டியில், நான் ஒரு நடுநிலையான குடும்பத்தில் பிறந்தவள். என்னை பொருத்த வரை வன்முறை என்பது தவறான விஷயம். நான் நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்று தான் சொல்லிக்கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டேன். 
 
என்னை பொருத்தவரை காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தில் சொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிட்கள் கொலை மற்றும் மாடுகளை கொண்டு சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல கட்டாயப்படுத்தி தாக்குதல் நடத்தியது ஆகிய இரண்டிற்கு பெரிய வேறுபாடுகள் இல்லை. 
யாராக இருப்பினும் எந்த சூழ்நிலையாக இருப்பினும் ஒடுக்கப்பட்டவர்கள் நிச்சயம் பாதுக்கப்பட வேண்டும். வலது சாரி, இடது சாரி இதில் எது சரி என எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பதுதான் என பேசியுள்ளார். இது கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. சாய் பல்லவியை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் கமெண்டுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர். 
 
விராட பர்வம் படத்தை இயக்குநர் வேணு உடுகலா இயக்கிவுள்ளார். இப்படத்தில் நாயகனாக நடிக்கும் ராணா டகுபதியுடன் பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பது படத்தை பற்றிய தகவல்.