செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (13:26 IST)

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஷூட்!

2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. இப்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் ரகுல் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வரும் அவர், வெளியிடும் போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. அப்படி இப்போது சிவப்பு நிற மாடர்ன் ஆடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.