வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (15:06 IST)

உடுமலைப்பேட்டை கௌசலயா பயோபிக் எடுக்கப்பட்டால் துணையாக நிற்பேன்… நடிகை பார்வதி கருத்து

கௌசல்யா தற்போது புதிதாக அழகு நிலையம் ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் சிறப்பு விருந்தினராக நடிகை பார்வதி கலந்துகொண்டார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டை சங்கர், கௌசல்யா என்ற கல்லூரி மாணவியை திருமணம் செய்து கொண்டார். சாதி மாறி செய்த இந்த திருமணத்திற்கு கௌசல்யாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக கௌசல்யாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. இதையடுத்து உடுமலைப்பேட்டையில் வைத்து சங்கரைக் கொலை செய்த அந்த கும்பல், கௌசல்யாவையும் கடுமையாக தாக்கியது. இதில் இருந்து மீண்ட கௌசல்யா இப்போது ஷக்தி என்பவரை மறுமணம் செய்துகொண்டு வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கௌசல்யா புதிதாக அழகு நிலையம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் சிறப்பு விருந்தினராக நடிகை பார்வதி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “கௌசல்யாவின் வாழ்க்கையை படமாக எடுத்தால் அதற்கு துணையாக நிற்பேன்” எனக் கூறியுள்ளார்.