திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2024 (17:20 IST)

எதிர்க்கட்சி தலைவரை திடீரென சந்தித்த நடிகை மேகா ஆகாஷ்.. என்ன காரணம்?

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நடிகை மேகா ஆகாஷ் தனது கணவருடன் சென்று சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகை மேகா ஆகாஷ், சாய் விஷ்ணு என்பவரை காதலித்த நிலையில், சமீபத்தில் இருவருக்கும் திருமணம் நடந்தது என்பதும், இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பதும் ஏற்கனவே பார்த்தோம்.

 குறிப்பாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சாய் விஷ்ணு- மேகா ஆகாஷ் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தனர்.

மேகா ஆகாஷின் கணவர் சாய் விஷ்ணு தந்தை பிரபல அரசியல்வாதி திருநாவுக்கரசு என்பதும், அவர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கணவர் சாய் விஷ்ணு, மாமனார் திருநாவுக்கரசு ஆகியவர்களுடன் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து நடிகை மேகா ஆகாஷ் ஆசி பெற்றார். இது குறித்த புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Edited by Siva