மாடர்ன் உடையில் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!
தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.
இதையடுத்து இப்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். நடிப்பில் மாளவிகாவுக்குக் கிடைத்த ரசிகர்களை விட, அவரின் புகைப்படங்கள் மூலமாக கிடைத்த ரசிகர்கள்தான் அதிகம். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.
இந்நிலையில் சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படத்தில் உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார். இந்நிலையில் இப்போது ஓனம் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை நிறத்தில் வித்தியாசமான ஆடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.