செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 7 ஏப்ரல் 2023 (14:42 IST)

நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. நடிகை குஷ்பூ திரைப்படங்கள் தயாரிப்பதிலும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பதும் அவருக்கு சமீபத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்  பதவி வழங்கப்பட்டது என்பது தெரிந்ததே.
 
இந்த நிலையில் நடிகை குஷ்பு தனக்கு காய்ச்சல் உடல் வலி சோர்வு ஆகியவை காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே காய்ச்சல் அறிகுறி வந்தவர்கள் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அதனை சாதாரணமாக நினைத்துக் கொள்ள கூடாது என்றும் அவர் அறிவுறுத்துள்ளார். 
 
நடிகை குஷ்பு மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva