செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (13:24 IST)

சினிமாவில் இருந்து விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்? புதிய படங்களுக்கு நோ..

நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சமீபத்தில் திருமணமான நிலையில், அவர் சினிமாவில் இருந்து விலக இருப்பதாகவும், தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும், புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் வருகை தந்திருந்தார்கள். 
 
இந்த நிலையில், சமீபத்தில் அவர் நடித்த ’பேபி ஜான்’ என்ற ஹிந்தி திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பு பெறாத நிலையில், தற்போது அவர் ரிவால்வர் ரீட்டா கன்னிவெடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
இந்த படங்களை முடித்துக் கொடுப்பதில் அவர் தீவிரமாக இருப்பதாகவும், புதிய திரைப்படங்களுக்கான வாய்ப்புகள் வந்த போதும், அந்த படங்களை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. 
 
திருமண வாழ்விற்கு முழுக்க முழுக்க தனது நேரத்தை ஒதுக்க திட்டமிட்டதாகவும், எனவே சினிமாவில் இருந்து கீர்த்தி சுரேஷ் விலக இருப்பதாகவும் கூறப்படுவது, அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Mahendran