வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (16:34 IST)

நடிகை கீர்த்தி சுரேஷ் குடும்பத்துடன் ஓட்டுப் பதிவு…வைரல் புகைப்படம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வந்து தனது ஜனநாயக கடமை ஆற்றினார்.
இதுகுறித்து அவர் பதிவிட்ட புகைப்படம் வைரலாகிவருகிறது. ரசிகர்கள் இதற்கு லைக்குகள் குவித்து வருகின்றனர்.
சமீபத்தில் இவர் நிதினுடன் இணைந்து நடித்த ராங் தி படம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.