திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (11:13 IST)

வாய்ப்புகள் வந்தபோதெல்லாம் உதறிவிட்டு இப்போது தேடும் பழம்பெரும் நடிகை!

தமிழ் சினிமாவில் 80 களின் இறுதியில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கனகா.

தமிழ் சினிமாவில் கரகாட்டக்காரன் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் கனகா. பல வெற்றி படங்களில் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தார். இவர் பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி ஆள் எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தார்.

கனகாவின் தாயார் நடிகை தேவிகாவின் மறைக்குப் பிறகும் அவர் குறித்த செய்திகள் மர்மமாகவே இருந்தன. திருமணம் ஆகிவிட்டது, என்னுடைய கணவரை யாரோ கடத்திவிட்டார்கள் என கனகா சில வருடங்கள் முன் புகாரளித்து மீண்டும் ஊடகங்களின் முன் தோன்றினார். தனது சொத்துக்களை சிலர் அபக‌ரிக்க முயற்சிப்பதாகவும் அவர் தெ‌ரிவித்திருந்தார். ஆனாலும் அதன் பின்னர் காணாமல் போனார்.

இந்நிலையில் இப்போது சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தோடு தீவிரமாக முயற்சி செய்து வருகிறாராம். வாய்ப்புகள் வந்தபோதெல்லாம் தலைமறைவாகி விட்டு இப்போது வாய்ப்பு தேடுகிறாரே என்ற கேள்வி எழுந்துள்ளது.