திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 1 மார்ச் 2023 (15:15 IST)

ரஜினியின் ‘லால் சலாம்’ படத்தில் நடிகை ஜீவிதா? என்ன கேரக்டர் தெரியுமா?

lal salaam
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் லால் சலாம் என்ற திரைப்படத்தில் நடிகை ஜீவிதா நடிகை இருப்பதாகவும் அவர் இந்த படத்தில் ரஜினியின் தங்கையாக  நடிகை இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் லால் சலாம்’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக ஐஸ்வர்யா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கும் நிலையில் டாக்டர் ராஜசேகரின் மனைவி நடிகை ஜீவிதா ரஜினியும் தங்கை கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 
 
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை ஜீவிதா தமிழில் மீண்டும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva