ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Updated : வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (15:29 IST)

நடிகை கௌதமியின் புதிய காதலன்: டுவிட்டரில் ஆவேசம்!

நடிகை கௌதமியின் புதிய காதலன்: டுவிட்டரில் ஆவேசம்!

நடிகர் கமலுடன் 13 வருடங்கள் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்து வந்த நடிகை கௌதமி சில மாதங்களுக்கு முன்னர் தனது மகளின் எதிர்காலம் கருதி பிரிந்தார்.


 
 
கமலை பிரிந்த கௌதமி அவரைப்பற்றி எந்த குறையும் சொல்லாமல் தனது வேலையை மட்டும் பார்த்து வந்தார். இந்நிலையில் நடிகை கௌதமியின் புதிய காதலர் யார் தெரியுமா என்ற தலைப்பில் இணையத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
 
அதில் நடிகை கௌதமி மீண்டும் நடிகர் கமலுடன் நெருக்கம் காட்டுவதாகவும், இவர்கள் இருவரும் தினமும் மணிக்கணக்கில் போனில் பேசுவதாகவும் கூறியுள்ளனர். மீண்டும் கமலும், கௌதமியும் இணைய இருக்கிறார்கள் என்ற வதந்தியை அந்த வீடியோவில் கிளப்பி விட்டுள்ளனர்.

 
இந்நிலையில் இதனை பார்த்து கடுப்பான நடிகை கௌதமி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வதந்தியை பரப்பியவர்களை முட்டாள்கள், நாய்கள் என கடுமையாக திட்டியுள்ளார். டுவிட்டரில் கௌதமி கூறியுள்ளதாவது, முட்டாள்கள் பேசுவார்கள், நாய்கள் குரைக்கும். நான் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டேன். மற்றவர்களும் அவர்களின் வாழ்வை வாழ வேண்டும் மற்றும் ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.