வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (16:16 IST)

ஒல்லியாக மாறி குட்டை பாவாடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த அஞ்சலி!

தமிழ் சினிமாவில் சில முகங்களை அவ்வளவு சீக்கிரத்தில் ரசிகர்கள் மறந்துவிட மாட்டார்கள். அந்த கதாபாத்திரத்தை நடிகையாக மட்டும் பார்த்திடாமல் அவர்களை தங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒரு கதாபாத்திரமாகவே எடுத்துக் கொள்வார்கள்.அந்த வகையில் தங்கள் வாழ்க்கையோடு பயணிக்கும் காதலியாகவும், தங்கையாகவும், தோழியாகவும் நிஜமாகவே உணர வைத்த கதாபாத்திரங்களில் நடித்தவர் தான் நடிகை அஞ்சலி.
 

 
நடிகை என்றாலே அவர்களுக்கு உடல் அழகு உள்ளவரை தான் மார்க்கெட், அதற்காக அவர் உணவு கட்டுப்பாடு,உடல் பயிற்சிகள் , கட்டுக்கோப்பான உடலமைப்பு போன்றவற்றை மேற்கொள்வர். அந்த வகையில் நடிகை அஞ்சலி கடந்த சில காலமாக உடற்பயிற்சியில் பெரும் கவனம் செலுத்தி வருகிறார். 


 
உடல் பருமனாக இருந்த அஞ்சலுக்கு பட வாய்ப்புக்கள் ஏதும் இல்லாததால் கடும் உடற்பயிற்சிகளை செய்து தற்போது ரொம்பவும் பிட்டாக மாறிவிட்டார் . இந்நிலையில் தற்போது தனது மெலிந்த உடலை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டுவருகிறார் அஞ்சலி. 

இதனை கண்ட ரசிகர்கள் அஞ்சலி இப்படி மாறிவிட்டார்! என்று அச்சர்யப்பட்டு வருகின்றனர். எது எப்படியோ இனிமேலாவது படவாய்ப்பு கிடைத்தால் சரி.