80 வயதானாலும் நடிப்பேன்… குழந்தை கொஞ்சம் வளரணும் –நடிகையின் ஆசை!
வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமான எமி ஜாக்சன் தனது நடிப்பு, குடும்பம் மற்றும் எதிர்காலம் குறித்து பேசியுள்ளார்.
மதராசப் பட்டணம் படம் மூலம் தமிழில் அறிமுகமான எமி ஜாக்சன் தொடர்ந்து தங்க மகன், ஐ, எந்திரன் 2 ஆகிய படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்தார். அதன் பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு இப்போது ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் சினிமாவில் தொடர்ந்து நடிப்பது குறித்து அவர் பேசியுள்ளார்.
அதில் ‘இந்தியா என்னை ஒரு நடிகையாக உருவாக்கியது. நான் என சினிமா வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் என் நிஜ வாழ்க்கையிலும் என்னை உயர்த்தின. என் குடும்ப சூழல் காரணமாக இப்போது என்னால் நடிக்க முடியவில்லை. மேலும் என் மகன் இன்னும் கொஞ்சம் வளரவேண்டும். என் அம்மாவும் கணவரும் எப்போதும் என் கூட இருக்கின்றனர். நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன். 80 வயதானாலும் நான் தொடர்ந்து நடிப்பேன்.’ எனக் கூறியுள்ளார்.