திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2020 (10:39 IST)

யோகி பாபுவை நாயை விட்டு விரட்டிய தயாரிப்பாளர் மனைவி ? ஏன் தெரியுமா?

நடிகர் யோகிபாபுவை வாய்ப்பு தேடி சென்ற போது திருடன் என நினைத்து தயாரிப்பாளரின் மனைவி நாயை விட்டு விரட்டியதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் இப்போது நம்பர் ஒன் நகைச்சுவை நடிகர் அந்தஸ்தில் இருப்பவர் யோகி பாபு. ஆனால் இதற்காக அவர் கடந்து வந்த பாதை ஏராளம். பருத்த உடல் உள்ள அவரை எல்லாப் படங்களிலும் உருவ கேலி செய்து காட்சிகள் வைக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் தானே கூட உருவகேலி செய்யும் கதாபாத்திரமாக நடித்தார்.

இந்நிலையில் சினிமாவில் வாய்ப்புக் கிடைப்பதற்கு முன் தயாரிப்பாளர் வீட்டுக்கு வாய்ப்பு கேட்டு சென்ற போது, அவரை திருடன் என நினைத்த அவர் மனைவி, நாயை விட்டு விரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.  அந்த நிலையில் இருந்து இன்று தமிழ் சினிமா ரசிகர்களின் ஆதர்ஸ் நகைச்சுவை நடிகராக உயர்ந்துள்ளார் யோகி பாபு.